Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்-விஜய் இருவரும் அந்த ஒரு விஷயத்தில் ரசிகர்களுக்கு மிகவும் உதாரணமாக உள்ளனர்- பிரபல தொகுப்பாளர்

தொகுப்பாளர்களில் கோபிநாத் கொஞ்சம் வித்தியாசமானவர். நிகழ்ச்சி முழுவதும் மிகவும் ஜாலியாக கொண்டு போகவேண்டும் என்று மட்டும் யோசிக்கும் தொகுப்பாளர்களில் மக்களை கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கக் கூடியவர்.

இவர் அண்மையில் தன்னுடைய சினிமா பயணம் பற்றி பேசியபோது அஜித்-விஜய் குறித்தும் பேசியுள்ளார்.

அதில் அவர், ரசிகர்கள் மத்தியில் இருக்கும் சண்டை தமிழ் சினிமாவில் பெரிய விஷயமாக பேசப்படுகிறது. ஒரு கட்டத்தில் ரசிகர்களின் சண்டை மோசமாக செய்கிறது. ரசிகர்களின் சண்டையை தாண்டி சமூக பிரச்சனை என்று வந்தால் ஒன்றாக இணைந்துவிடுகிறார்கள், உதாரணத்துக்கு ஜல்லிக்கட்டு சொல்லலாம்.

அஜித்-விஜய் இருவரையும் பேட்டி எடுத்துள்ளேன். விஜய்-அஜித் பற்றி கூறியதும், அஜித்-விஜய் பற்றி கூறியதும் ஒன்றுதான். இருவரும் சினிமாவை தாண்டி தங்களது குடும்பம் மேல் மிகுந்த அக்கறை கொண்டவர்கள்.

ஆரோக்கியமான சினிமா சண்டை நல்லது ஆனால் அஜித்-விஜய் இருவரும் மற்றவர்களை பற்றி தவறாக கூறியதே இல்லை. ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக உள்ளனர் என்று பேசியுள்ளார்.