Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

90களில் இருந்த அந்த விஷயம் இப்போது விஜய்க்கு இருக்காதா? - ஏங்கும் பிரபல இயக்குனர்

விஜய் எப்போதுமே தன்னுடைய படங்களில் நடனத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்கக்கூடியவர். ஏனெனில் அவரிடம் ரசிகர்கள் மிகவும் நேசிப்பது நடனமும் தான். அதையும் தாண்டி 90களில் இருந்த ரசிகர்கள் விஜய் ஹேர் ஸ்டைலையும் ரசித்துள்ளார்கள்.

தற்போதும் அவருடைய ஹேர் ஸ்டைல் அப்படி இருக்காதா என்று நிறைய பேர் ஏங்குகின்றனர். இதே ஆசை தனக்கும் இருப்பதாக கூறியுள்ளார் இயக்குனர் சுதாகர்.

திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற படத்தை இயக்கியிருக்கும் இவர் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது விஜய் பற்றி கேட்டபோது, என்னை போல் 90களில் பிரண்ட்ஸ், யூத் போன்ற படங்களில் விஜய்யை பார்த்து ரசித்தவர்களுக்கு அந்த ஆசை இருக்கிறது என்று கூறியுள்ளார்.