Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் தான் ஆக்ஷன் ஸ்டார், ஆனால் விஜய் மற்றும் சூர்யா- பிரபல நாயகியின் ஹாட் டாக்

சுந்தர்.சி இயக்கத்தில் தயாரான கலகலப்பு 2 படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் நடித்த மூன்று நாயகிகளில் நிக்கி கல்ராணியும் ஒருவர்.

இவர் படத்தின் புரொமோஷனுக்காக பல பேட்டிகள் கொடுத்து வந்தார். அப்போது ஒரு பேட்டியில் தமிழ் சினிமாவில் ஆக்ஷன், எமோஷன், காமெடியில் கலக்கும் மூன்று நாயகர்கள் பற்றி கூறுங்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், என்னை பொருத்தவரை ஆக்ஷன் என்றால் அஜித் அவர்கள் தான். எமோஷனல் என்றால் விஜய்-சூர்யா இருவரையும் கூறுவேன். காமெடி என்று பார்த்தால் நிறைய நடிகர்கள் உள்ளனர், ஆனால் குறிப்பாக நான் சிவகார்த்திகேயனை கூறுவேன் என்றார்.