Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெண்கள் தினத்திற்காக தனது கட்சி சார்பாக கமலின் புதிய திட்டம் !

சமீபத்தில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினர். இந்த காட்சியில் முக்கிய பொறுப்பாளராக நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் கமிலா நாசர் பங்குகொண்டுள்ளனர்.

இந்நிலையில் வருகிற மார்ச் 8 ம் தேதி பெண்கள் தினத்தன்று மக்கள் நீதி மய்யம் சார்பாக பெண்களுக்காக தனது கட்சி சார்பாக ஒரு விழாவை நடத்தவுள்ளனர்.

இதற்காக இன்று ஸ்ரீப்ரியா மற்றும் கமிலா நாசர் ஒரு வீடியோ மூலம் தமிழ்நாட்டு பெண்களை கலந்து கொள்ளமாறு அழைத்துள்ளனர்.அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கான கேள்விகளை கமல் அவர்களிடம் நீங்கள் கேட்கலாம் அவர் உங்கள் கேள்விக்கு பதிலளிப்பார் என்று வீடியோ மூலம் கூறினார்.