Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீமானுக்கு பதிலடி கொடுத்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் இன்னும் சில தினங்களில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார். நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர் சிலை திறந்து வைத்த ரஜினி ரசிகர்களிடம் பின் உரையாற்றினார்.

அவர் நேற்று பேசிய கருத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது, குறிப்பாக என்னை வரவேற்க வில்லை என்றாலும், கிண்டல் செய்யாதீர்கள் என்றார்.

மேலும், சீமான் தொடர்ந்து ரஜினியை தமிழன் இல்லை என்று குற்றம் சாட்டி வருகின்றார், அதற்கு பதிலடி தரும் வகையிலும் சில கருத்துக்களை ரஜினி பேசினார்.

இதில் ‘தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் உலக அளவில் வளர வேண்டும், அப்போது தான் தமிழின் சிறப்பு உலகிற்கு தெரியும்’ என மறைமுகமாக சீமானுக்கு பதிலடி கொடுத்தார்.