Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகமே எதிர்பார்க்கும் மிஷன் இம்பாசிபிள் 6 பற்றி முக்கிய அறிவிப்பை நேற்று வெளியிட்ட டாம் க்ரூஸ்

உலகளவில் மிகப்பெரிய முன்னணி ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். இவர் பல ஆக்க்ஷன் படத்தில் நடித்தாலும் மிஷன் இம்பாசிபிள் என்ற சீரியஸ் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். அதுமட்டுமில்லாமல் தனது உயிரை துச்சமாக நினைத்து பெரிய ரிஸ்க்கான பல ஆக்க்ஷன் காட்சிகளில் நடித்த சாகச நடிகர்.

இந்நிலையில் இவரது நடிப்பில் தற்போது மிஷன் இம்பாசிபிள் படத்தின் 6-வது பாகம் உருவாகி வருகிறது, நேற்று நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு அபுதாபியில் முடிந்துவிட்டதாக டாம் குரூஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு மாதம் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், நேற்று கடைசி நாள் படப்பிடிப்பின் போது ஒரு மாபெரும் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. அதில் டாம் குரூஸ், 25,000 அடி உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து கொண்டு சண்டை செய்யும்படியான காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.