தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பெயர்கள் என்றால் விஜய், அஜித். ரஜினிக்கு பிறகு சினிமா வியாபாரம் என்பது இவர்களை நம்பி தான் உள்ளது.
ஆனால், தற்போது சினிமா ஸ்ட்ரைக் காரணமாக எந்த ஒரு படமும் திரைக்கு வரவில்லை, என்று இந்த ஸ்ட்ரைக் முடியும் என்றும் தெரியவில்லை.
அந்த அளவிற்கு நாளுக்கு நாள் விடை தெரியாமல் செல்கின்றது இந்த ஸ்ட்ரைக், இதற்கு ஒரே தீர்வு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய், அஜித் இந்த பிரச்சனைக்காக முன் வந்து நிற்கவேண்டும் என்று இயக்குனர் ஆர்.கே.செலவமணி கூறியுள்ளார்.