Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்-வெற்றிமாறன் படம் உண்மையா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்

விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் முடிந்து இவர் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்று பல தகவல்கள் உலா வருகின்றது.

இந்த லிஸ்டில் மோகன்ராஜா பெயர் தான் முதலிடத்தில் உள்ளது, இதை தொடர்ந்து அட்லீ, வினோத் பெயர்களும் அடிப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெற்றிமாறன் விஜய் கூட்டணி அமைவதாக கூறப்பட்டது, இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.

நம் தளத்தில் கூட இதுக்குறித்து தெரிவித்து இருந்தோம், தற்போது விஜய் தரப்பில் இதைப்பற்றி கேட்ட போது ‘விஜய்யை வெற்றிமாறன் முன்பு சந்தித்தார்.

சமீபத்தில் இருவரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை, அப்படியிருக்க இந்த செய்தியில் உண்மையில்லை’ என்று தெரிவித்துள்ளார்கள்.