Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவுதம் மேனன் சார் சொல்வது பொய் - காத்திக் நரேன் பதிலடி !

கடந்த சில தினங்களாக துருவங்கள் 16 இயக்குனர் காத்திக் நரேனுக்கும் , இயக்குனர் கவுதம் மேனனுக்கு பிரச்சனை இருப்பது வெளி உலகுக்கு தெரியவந்தது. நரகாசுரன் ;படத்துக்காக தன்னுடைய பணத்தைச் செலவு செய்ததால் அடுத்தப் படத்தை ஆரம்பிக்க முடியாமல் உள்ளேன் என்று கெளதம் மேனனுக்கு எதிராகப் பேட்டியளித்திருந்தார் கார்த்திக் நரேன். கெளதம் மேனனும் பதிலுக்கு ட்விட்டர் மூலமாக மறைமுகமாக பதில் சொன்னார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் கவுதம் மேனன் 2பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில் குறிப்பிடும் படியான விஷயம் " நரகாசூரன் படம் வெளிவருவதற்கான வேலைகள் நடந்து வரும் வேளையில் கார்த்திக் நரேன் இந்த செயல் என்ன வேதனைப்படுத்தியது, ஆனால் நானும் அவருக்கு பதில் ட்வீட் செய்திருக்க கூடாது,

அதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் அதே சமயம் நரகாசூரன் படத்துக்காக அவர் கேட்ட எல்லா விஷயத்தையும் செய்து கொடுத்தோம் " குறிப்பாக அரவிந்த் சுவாமி சம்பளம் கொடுத்தால் தான் டப்பிங் பேசுவேன் என்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு இயக்குனர் கார்த்திக் நரேன் பதில் கூறுகையில், நான் ஆதாரம் இல்லாமல் அவரை பற்றி பேசவில்லை, விரைவில் ஆதாரத்துடன் வருகிறேன். ஆனால் ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். இந்த படத்துக்காக அரவிந்த் சுவாமி சார் எனக்கு பல வகையில் உதவி செய்தார், ' கவுதம் சார் அரவிந்த் சுவாமி சாரை பற்றி சொல்வது பொய், அரவிந்த் சுவாமி கதாபாத்திரத்துக்கு வேறு ஒருத்தரை வைத்து டப்பிங் செய்யலாம் என கவுதம் சார் சொன்னார் , ஆனால் நான் சம்மதிக்கவில்லை, எனக்காக அவர் டப்பிங் பேசினார்.

தற்போது வரை எனக்கு உறுதுணையாக இருப்பது அரவிந்த் சுவாமி அவர்கள் தான் என்றார்.