பைரவா படத்தில் விஜய் கிரிக்கெட் ஆடி வில்லன்களை பந்தாடும் சீனில் மெயின் வில்லனாக நடித்திருந்தவர் மைம் கோபி.
தளபதி விஜய் என்றாலே அதிகம் பேசமாட்டார், ஷூட்டிங்கில் அமைதியாக இருப்பார் என பலரும் கூறி கேட்டிருக்கிறோம். ஏன் அப்படி என பைரவா ஷூட்டிங்கின்போது மைம் கோபி கேட்டாராம். அதற்கு பதிலளித்த விஜய் "அது அப்படித்தான் பழகிடுச்சு" என கூறியுள்ளார்.
மேலும் மைம் கோபியின் தம்பிக்கு விஜய் என்றால் உயிராம். அவரை பற்றி கூறியதும் விஜய் உடனே 'நாளை அவரையும் ஷூட்டிங்கிற்கு அழைத்து வாருங்கள்' என கூறினாராம்.
மறுநாள் அவரது தம்பியுடன் அரை மணி நேரத்திற்கு மேல் நேரம் ஒதுக்கி பொறுமையாக பேசினாராம். அப்போது அவன் 'எனக்கு எப்போ ட்ரீட் வைப்பீங்க?' என கேட்டானாம், அதற்கு விஜய்யும் உனக்கு பிடித்த பிரியாணி வாங்கி தருகிறேன் என கூறினாராம்.
இந்த சம்பவம் பற்றி மைம் கோபி ஒரு பேட்டியில் நெகிழ்சியாக பேசியுள்ளார்.