Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களுக்காக அஜித்-விஜய் செய்த ஒரு விஷயம்- சுவாரஸ்ய தகவலை வெளியிட்ட பிரபலம்

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்கள் அஜித்-விஜய். இருவருக்கும் இருக்கும் மாஸ் இன்னும் எந்த நடிகருக்கும் வரவில்லை, இனியும் வருமா என்றால் சந்தேகம் தான்.

அஜித்-விஜய் நண்பர்களாக தங்களை அடையாளம் காட்டினாலும் அவரது ரசிகர்கள் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் அது வேறு விஷயம்.

இந்த நிலையில் இரண்டு மாஸ் நடிகர்களுடன் பணிபுரிந்த நடன இயக்குனர் லலிதா ஷோபி, அவர்களை பற்றி சுவாரஸ்ய விஷயங்களை கூறியுள்ளார்.

இரண்டு நடிகர்களுமே சிறந்த மனிதர்கள், எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய் அமைதியாகவே கொஞ்சம் ஜாலியாக இருப்பார், அஜித் அவர்கள் ஜாலியாகவே இருப்பார் ஆனால் அமைதியாக இருப்பது போல் இருக்கும்.

உடம்பில் அஜித் அவர்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும், அதனால் நாங்கள் மூமெண்ட்களை குறைவாக கொடுக்கலாமே என நினைப்போம். ஆனால் அஜித் அப்படி நினைப்பதற்கு வழியே விடமாட்டார். என்னால் முடியும் என் ரசிகர்களுக்காக நான் கண்டிப்பாக செய்வேன் என்பார்.

அதேபோல் விஜய் அவர்களும் தன்னிடம் அதை ரசிகர்கள் விரும்புகிறார்கள், அதனால் பாடலுக்கு என்ன நடனம் நினைக்கிறீர்களோ சொல்லுங்கள் நான் செய்கிறேன் என்று கூறுவாராம்.

தற்போது ஆளப்போறான் பாடலுக்கு நடனம் அமைத்த ஷோபி நிறைய விருதுகள் குவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.