Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷூட்டிங் நிறுத்திவிட்டு மண்வெட்டி எடுத்து விவசாயிகளுக்கு உதவிய முன்னணி ஹீரோ

விவசாயிகளுக்கு உதவ வேண்டும், விவசாயம் அழிய கூடாது என பிரபலங்கள் பலர் வாய்வழியாக பேசித்தான் பார்த்திருப்போம். யாரும் களத்தில் இறங்கி எதுவும் செய்வது கிடையாது.

ஆனால் தற்போது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மகாராஷ்டிராவின் சதாராவில் உள்ள Pimpode Budruk என்ற கிராமத்தில் மழை நீரை சேகரிக்கும் குளம் வெட்ட 25 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.

அது மட்டும் இன்றி தான் நடித்துக்கொண்டிருந்த படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு நேற்று அவரே நேரில் சென்று விவசாயிகளுடன் குளம் வெட்டினார்.

இது அந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ள அந்த கிராமத்தில் அக்ஷய் மூலம் வறட்சி நீங்கும் என்பதால் அவர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.