Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் ரசிகர்கள் செய்த மோசமான செயல்- அப்செட்டில் அஜித் தரப்பு?

அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

எப்போது இவரின் அடுத்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார், இப்படத்திற்கு விசுவாசம் என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த காவேரி மௌனப் போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளவில்லை என்பதால் முன்னணி வார இதழ் ஒன்று ‘அஜித்திற்கு தமிழ் உணர்வு இல்லை’ என்று அட்டைப்படத்தில் வெளியிட்டது.

இதற்கு அஜித் ரசிகர்கள் சிலர் அந்த பத்திரிக்கையை கண்டித்து பேனர், போஸ்டர் அடித்தனர், அது பரவாயில்லை, ஆனால், அந்த பத்திரிக்கை போஸ்டரை அவர்கள் எரித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தது அஜித் தரப்பையே வருத்தப்பட வைத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.