Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் எஸ் வி சேகர் மீது வழக்கு போடப்படும் - அதிமுக அமைச்சர் பதில்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் பிஜேபியின் உறுப்பினருமானவர் எஸ் வி சேகர். தற்போது படங்களில் வாய்ப்புக்கள் இல்லாததால் பிஜேபி க்குஆதரவாக பேசி வருகிறார்.

சமீபத்தில் கவர்னர் பன்வாரிலால் ஒரு பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் கை வைத்தது பெரும் பிரச்சனை ஆனது. அதற்கு எஸ்.வி.சேகர் தன் பேஸ்புக் பக்கத்தில் ‘இவர்களும் படுக்கையை பகிர்ந்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார்கள்’ என பெண் பத்திரிகையாளர்களை மிகவும் மோசமாக பேசியுள்ளார். இவருடன் சேர்ந்து பிஜேபியின் தேசிய செயலாளரான எச்.ராஜாவும் அவ்வப்போது மற்றவர்களை பற்றி தேவையில்லாத வார்த்தைகளை பேசி சர்ச்சைக்குள்ளாகிறார்.

இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எச்.ராஜா, எஸ்.வி.சேகர் மீது அரசே வழக்கு தொடரும்; இரண்டு சைபர் சைக்கோக்களால் தமிழகத்திற்கே ஆபத்து என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.