Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் படமாக இருந்தாலும் வரிசைப்படி தான் இருக்கணும் - இரும்பு திரை ரிலீஸ் தேதியில் விஷால் மாற்றம்

விஷால், சமந்தா நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் மே மாதம் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று இன்று காலை அறிவிக்கப்பட்டன. ரிலீஸ் தேதியுடன் கூடிய புத்தம் புதிய போஸ்டர்களும் வெளிவந்தது. இதனால் விஷால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்

இந்த நிலையில் இந்த படம் மே 11ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என்று விஷால் அறிவித்துள்ளார். இந்த படத்தின் விநியோகிஸ்தர்கள், தன்னுடைய நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்காமல் மே 11 ரிலீஸ் தேதி என்று அறிவித்துவிட்டனர் என்றும், தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கும் இடையே சரியான புரிதல் இல்லாமல் நடந்த குழப்பத்தால் இந்த அறிவிப்பு வந்துவிட்டது .

இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.