Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மகேஷ் பாபு அரசியலுக்கு வருகிறாரா, அவரே கூறிய அதிர்ச்சியான பதில் !

சமீபத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த பரத் அனே நேனு என்ற படம் சக்கைபோடு போட்டு வருகிறது. இப்படத்தில் மகேஷ் பாபு ஆந்திர பிரதேஷ் முதலமைச்சராக நடித்திருந்தார், இப்படம் முழுக்க தற்போதைய மோசமான அரசியல் பார்வையை பிரதிபலித்தது. அதை மாற்ற முயற்சிக்கும் இளம் முதலமைச்சராக நடித்தார். வர்த்தக ரீதியாக இப்படம் வசூல் அள்ளி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படம் வெற்றிபெற்றதையொட்டி நேற்று திருப்பதி கோயில் சாமி தரிசனம் செய்தார், அப்படியே அங்கு இருக்கும் திரையரங்கு சென்று ரசிகர்களை சந்தித்தார் மகேஷ் பாபு , அப்போது கூடியிருந்த பத்திரிகையாளர்கள் உங்களுக்கு அரசியல் வர எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு அரசியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் இயக்குனர் எனக்கு சொன்ன கேரக்டரை உள்வாங்கிக் கொண்டும், மாமாவும், எம்.பி.யுமான கல்லா ஜெயதேவ் பார்லிமென்ட்டில் நடந்து கொள்ளும் விதத்தை வைத்தும் நடித்துள்ளேன்.

100 ஆண்டுகள் ஆனாலும் மேக்கப் போட்டு கொண்டு திரைப்படத்தில் மட்டுமே நடிப்பேன் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என அவர் தெரிவித்தார்.