Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரையரங்கிலே எஸ் ஜே சூர்யாவை கெட்ட வார்த்தையில் திட்டினேன் - பிரபல முன்னணி நடிகர் பேச்சு !

பல வெற்றி படங்களை இயக்கி தற்போது நடிகராக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருபவர் எஸ் ஜே சூர்யா. இவர் சமீபத்தில் ஒரு தனியார் விருது விழாவில் சிறந்த வில்லனவுக்கான விருதை ஸ்பைடர் படத்துக்காக வென்றார்.

அதே சமயம் அதே விருது விழாவில் நடிகர் பிரசன்னாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது பவர் பண்டி படத்துக்காக கிடைத்தது. விருது வென்றதை பற்றி மேடையில் பிரசன்ன பேசுகையில், சில சமயங்களில் விருதுகளில் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை, அஞ்சாதே படத்துக்கு ஒரு விருது விழாவில் கூட விருது கிடைக்கவில்லை, சரி என்று திருட்டு பயாலே 2 படத்தில் நடிக்கும் போது இந்த வில்லன் கதாபாத்திரத்துக்கு எனக்கு விருது கிடைக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் நான் ஸ்பைடர் படம் பார்த்து பிறகு முடிவு பண்ணிட்டேன், இந்த தடவையும் எனக்கு விருது இல்லை, என்ன நடிப்பு எஸ் ஜே சூர்யா சார், ஸ்பைடர் இன்டெர்வல் பிளாக் வரும் போது திரையரங்கிலே எஸ் ஜே சூர்யாவை கெட்ட வார்த்தையில் திட்டினேன். அந்த விருதுக்கு அவர் தகுதியானவர், மாற்றும் எனக்கும் பவர் பாண்டி படத்துக்காக விருது கொடுத்ததுக்கு நன்றி என தெரிவித்தார்