தமிழசினிமாவின் ட்ரெண்ட் செட்டர் இயக்குனர்களுக்கு உதாரணமாக இருப்பவர் மணிரத்னம். காற்று வெளியிடை படத்தின் தோல்விக்கு பிறகு ஹிட் கொடுத்தாக வேண்டும் என்ற முனைப்பில் மீண்டும் தமிழசினிமாவின் 4முன்னணி நடிகரைகளான அரவிந்த் சுவாமி, அருண் விஜய், சிம்பு மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகுகிறது.
இதுநாள் வரை இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தனித்தனியாக படமாக்கப்பட்டு வந்த நிலையில், நடிகர்கள் 4 பேரும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த படத்தில் அரவிந்த்சாமி அரசியல்வாதியாகவும், சிம்பு என்ஜினீயராகவும், விஜய்சேதுபதி போலீசாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடிக்கின்றனர். ஜோதிகா ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.