Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் தான் எப்போதும் ஒரு உதாரணம் என மீண்டும் நிரூபித்துவிட்டார்! மிக பிரபல நடிகரின் பெருமிதம்

விசுவாசம் படத்தின் வேலைகள் அமைதியாக தொடங்கிவிட்டது. ரசிகர்களுக்கு மிகவும் குஷி தான். ஷூட்டிங் ஷெட் புகைப்படங்கள் கசிந்த படி இருக்கிறது. அஜித்தும் இதற்காக ஹைதராபாத் சென்றுவிட்டார்.

விமான நிலைத்தில் அவருடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகிவிட்டன. அண்மையில் அவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இது பலருக்கும் மகிழ்ச்சி. இந்நிலையில் அவரை தற்போது ட்விட்டர் மூலம் வாழ்த்தியுள்ளார் பிரபல நடிகர் விவேக் ஓபராய். விவேகம் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் இவர்.

அஜித் அண்ணா மீண்டும் ஒருமுறை இதை செய்திருக்கிறார். என் நண்பனால் பெருமையடைகிறேன். ஹெலிகாப்டர் டெஸ்ட் பைலட்டாக அவர் கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவுள்ளார்.

உங்களுக்கு திறமை அதிகம் இருக்கிறது அண்ணா. எப்போதும் உதாரணம் என காட்டிவிட்டார் தல அஜித் என விவேக் பாராட்டியுள்ளார்.