Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல பாலிவுட் ஹீரோ வைத்து பேய் படத்தை எடுக்கும் தனுஷ் அப்பா !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். இவருடைய அப்பா கஸ்தூரி ராஜா ஒரு பிரபல இயக்குனர், இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு பேய் படத்தை இயக்குகிறார், இப்படத்துக்கு பாண்டி முனி என்ற தலைப்பை வைத்துள்ளார்.

இது இவர் இயக்கத்தில் வரும் 23ம் வது படம். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் அர்கோரியாக நடிக்கிறார், இவருடன் அவருடைய பாணியில் பல புதுமுக நடிகர்ககளை அறிமுகப்படுத்துள்ளார்.

இந்த படத்தை பற்றி அவர் கூறுகையில், இதுவரை கிராம வாழ்வியலையும், காதலையும், குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன். சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் பாண்டி முனி. அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது என கூறினார்