Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யோகி பாபு மீது கடும் கோபத்தில் பிரபல இயக்குனர்- பிரச்சனை தீருமா?

யோகி பாபு தமிழ் சினிமாவில் கலக்கிவரும் ஒரு காமெடியன். அடுத்தடுத்து அவரது கையில் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன.

அவருடைய உடலமைப்பு, முக பாவனை, குறிப்பாக அவரது ஹேர் ஸ்டைல் இது எல்லாமே ரசிகர்களுக்கு அவரிடம் பிடித்த விஷயங்கள். இப்போது இவர் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை காதல் செய்யும் ஒரு விஷயம் வைரலாக பேசப்படுகிறது.

அப்படத்தில் இடம்பெறும் கல்யாண வயசு என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது, நயன்தாராவிடம் காதல் சொல்ல யோகி பாபுவும் அட்டகாசம் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், யோகி பாபுவை சொல்லும் போது கோபமான ஸ்மைலியை ஜாலியாக போட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன்-நயன்தாரா காதலிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே.