Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல் மற்றும் பிஜேபிக்கு பதிலடி தந்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்கவுள்ளார், அதற்காக தன் ரசிகர்களை அழைத்து பேசி வருகின்றார். இந்நிலையில் இன்று மகளிர் அணியை அழைத்து பேசியுள்ளார்.

அவர்களுடன் பேசி முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த போது ‘ஏன் கமல் நடத்திய விவாசயிகள் குறை தீர் கூட்டத்திற்கு செல்லவில்லை? ரஜினி வந்து இருக்கலாம் என்று கமலே கூறினாரே!’ என்று கேட்டனர்.

அதற்கு ரஜினி ‘அவர் அனைத்து கட்சியினரை தான் அழைத்தார், நான் இன்னும் கட்சியே தொடங்கவில்லையே’ என்று பதில் அளித்தார்.

மேலும், மெஜாரட்டி நிரூபிக்க எடியுரப்பாவிற்கு ஆளுனர் 15 நாள் கொடுத்தது கேலிகூத்தாக உள்ளது என்றும் பதில் அளித்தார்.