Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எதாவது பிரச்சனைனா விஷால் கிட்ட தான் வருவேன் - எஸ் ஏ சந்திரசேகர் ஆவேசம் !

சமூகத்தில் நடந்த உண்மை சம்பவங்களை பற்றி படமாக வெளிவருவது மிகவும் குறைவு. அதுவும் 2016ம் நடந்த சர்ச்சைக்குரிய கொலை வழக்கான ஸ்வாதி கொலை வழக்கை படமாக எடுத்துள்ளார் ரமேஷ் செல்வன்.

இவர் ஏற்கனவே உளவுத்துறை, ஜனனம் போன்ற படங்களை எடுத்தவர். இந்நிலையில் இது உண்மை சம்பவம் என்பதால் படக்குழு பல பிரச்சன்னைகளை சந்தித்தது. ஒரு வழியாக படத்தின் தலைப்பை நுங்கம்பாக்கம் என்று மாற்றி மிக விரைவில் வெளிவரவுள்ளது. இதன் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் விஷால், எஸ் ஏ சந்திரசேகர், சினேகன் போன்றவர்கள் பங்குபெற்றனர். இந்நிலையில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் பேசுகையில், முதலில் எதுக்கு நாம் பயப்படவேண்டும் , ஒரு உண்மை சம்பவத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அதற்கு ஏன் பயப்படணும், சினிமாவில் சுதந்திரம் இல்லையா , எதோ ஒரு அமைப்புக்காக இப்படி மாற்றி கொண்டே போனால் சரியான படைப்பாக இருக்காது,

நானும் ஒரு உண்மை சம்பவத்தை வைத்து டிராபிக் ராமசாமி படத்தை எடுத்திருக்கிறேன், எதாவது பிரச்சனை என்றால் விஷால் கிட்ட தான் வருவேன், நீங்க எங்கு கூப்பிட்டாலும் தைரியமா வந்து போராடுவேன். எனக்கு 76 வயது ஆகிடுச்சு, ஆனால் பயமில்லை கண்டிப்பா போராட வேண்டும், என் பட விழாவுக்கும் விஷால் வரவேண்டும் என ஆவேசமாக கூறினார்.