தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் செட் அமைத்து எடுத்து வருகின்றனர்.
தற்போது இணையத்தில் செம்ம ட்ரெண்ட் ஆகிவருவது யோகிபாபுவின் கல்யாண வயசு பாடல் தான்.
சரி இது ஒரு பக்கம் இருந்தாலும், விஜய் நடித்து வரும் படத்தில் யோகிபாபு ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றாராம், இதற்கு முன் ஜில்லா, தெறி ஆகிய படங்களிலும் யோகிபாபு நடித்தாராம்.
அந்த காட்சியை எல்லாம் கட் செய்ய, மெர்சலில் சின்ன ரோல் இவருக்கு கொடுத்தார்களாம், ஆனால், தளபதி-63யின் படம் முழுவதும் விஜய்யின் நண்பராக யோகிபாபு வருகிறாராம்.