Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காளி பட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கிருத்திகா உதயநிதி !

கடந்த வெள்ளிக்கிழமை விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் காளி. இப்படத்துக்கு மக்களிடையே கலவையான விமர்சனங்கள் வந்தன, ஆனால் ஒரு சில விமர்சகர், படத்தை எப்படி விமர்சனம் செய்வது என்று தெரியாமல் படத்தை பார்க்காதீர்கள் என்று போல் விமர்சனம் செய்கின்றனர்.

இதுபற்றி ஒரு குறிப்பிட்ட விமர்சகரின் யூடுப்பிலே எப்படி விமர்சனம் கொடுக்க வேண்டும் என்று கிருத்திகா உதயநிதி விளக்கம் கொடுத்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ஒரு படத்துக்கு விமர்சனம் என்பது முக்கியம் ஆனால் படத்தை நன்கு ஆராய்ந்து இது நல்ல இருந்தது, இது ஒர்கவுட் ஆகவில்லை என்று சூட்டிக்காட்டினால் தானே எங்களுக்கு தெரியும், காளி படத்தில் மூன்று கதையிலும் ஒரு விஷயத்தை கனெக்ட் செய்கிற மாதிரி வைத்திருப்பேன்.

இதுபற்றி எந்த விமர்சகரும் கூறவில்லை, வலது கை உடையவர் பற்றி சொல்லிருப்பேன், பார்வதி என்ற ஒரு கதாபாத்திரத்தை பற்றி சொல்லிருப்பேன், டின்ஏ பற்றி சொல்லிருப்பேன் என பல விஷயங்கள் உள்ளது.

விமர்சனம் பண்ணும்போது ஒரு பொறுப்பு வேண்டும். உங்கள் விமர்சனம் எல்லாம் ஒரே மாதிரி உள்ளது என்று தனது வருத்தத்தை கிருத்திகா உதயநிதி கூறினார்.