Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் கேமராவுக்கு பின்னால்! ஆர்யா எடுத்த அதிரடி முடிவு

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் ஆர்யா மீண்டும் பிரபலமானார். அவருக்கு படங்கள் பெரிதளவில் இல்லை என்ற போதிலும் இந்த நிகழ்ச்சியால் அதிகம் பேசப்பட்டார்.

ஆனால் நிகழ்ச்சியின் இறுதியில் அவர் எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளாதது ரசிகர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இது பெரும் சர்ச்சையானது. ஆனால் போட்டியாளர்கள் சிலர் ஆரியாவுக்கு ஆதரவாக பேசினார்கள். இந்நிலையில் ஆர்யாவிடம் சமீபத்தில் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

இதில் அவர் டிவியில் சிலவற்றை தான் நீங்கள் பார்த்தீர்கள். கேமராவுக்கு பின்னால் பல விசயங்கள் இருக்கிறது. அதனால் தான் நான் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற முடிவு எடுத்தேன்.

இது மற்ற டிவி நிகழ்ச்சிகளை போல கிடையாது. என் சொந்த வாழ்க்கையை பாதிக்கும் என தெரிந்துகொண்டு தான் நான் அதில் பங்கேற்ற சம்மதம் சொன்னேன் என கூறியுள்ளார்.

மேலும் இருட்டறையில் முரட்டு குத்து படத்தின் இயக்குனர் சந்தோசின் படத்தில் நடிப்பதால் அடல்ட் படத்தில் நடிப்பீர்களா என கேட்கிறார்கள். ஏ சர்டிஃபிகேட் படங்களில் நடிக்க விருப்பமில்லை என கூறியுள்ளார்.