Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்படிப்பட்ட நிகழ்ச்சி மூலம் விஷால் சின்னத்திரைக்கு வருகிறாரா ?

தமிழ் திரைத்துறையிலே மிக பிஸியான நடிகர் விஷால். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், விழாக்கள் , சினிமா என பல வேலைகளில் அலைந்து கொண்ட இருப்பர். இவர் நடிப்பில் வந்த இரும்புத்திரை படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்று இவரிடம் பிறமொழியில் வெற்றிபெற்ற பிரபல நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க கேட்டு வருகிறார்கள் .தெலுங்கு முன்னணி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி மேது சைத்தம்.

வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதனை நடிகை லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கி வருகிறார்.வாழ்க்கையில் போராடி ஜெயித்த மக்களின் கதை நேர்காணலாக ஒளிபரப்பாகும், சினிமா செலிபிரிட்டிகள் இதில் கலந்து கொள்வார்கள். சினிமா முன்னணி நட்சத்திரங்கள் தங்களது வழக்கமான வேலையை தவிர்த்து சாதரண மக்கள் செய்யும் வேலையை ஒரு நாள் செய்ய வேண்டும்.

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் ராணா ஒரு நாள் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்தார். இந்த ஷோவை தான் விஷாலை தொகுத்து வழங்கு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறதாம்.