Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரையும் சிரிக்கவைத்த இமான் அண்ணாச்சியை பாதித்த கொடும் சம்பவம்!

இமான் அண்ணாச்சி யார் என கேட்டால் குழந்தைகள் கூட கைகாட்டும். சினிமாவை விட டிவியில் இவரை நாம் அதிகம் பார்த்திருப்போம். குட்டீஸ் சுட்டிஸ், சொல்லுங்கண்ணே சொல்லுங்க போன்ற நிகழ்ச்சிகளால் பிரபலமானவர். இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி.

அண்மையில் அவரின் தேவாலய 75 ம் ஆண்டு விழாவுக்காக அங்கு சென்றுள்ளார். அப்போது தான் எதிர்பாராத விதமாக ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

விசயமறிந்த அவர் மக்களை நேரில் சென்று சந்தித்து பிரச்சனை பற்றி கேட்டிருக்கிறார். 100 வது நாள் போராட்டம் என்பதால் மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட தான் சென்றார்களாம்.

ஆனால் மக்களை அதிகாரிகள் தடுத்திருக்கிறார்கள். இதனால் அங்கு கலவரமாகியிருக்கிறது. மக்கள் யாரும் போலிஸை தாக்கவில்லையாம். அவரது அண்ணன் வீட்டார் தூத்துக்குடியில் தான் இருக்கிறார்களாம்.

வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை என புலம்பியிருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டது கேவலமான செயல். சம்பவத்தன்றே உயிரழந்தவர்களுக்கு ரூ 10 லட்சம் நிவாரணம் என்ற முதல்வரின் அறிவிப்பு கேவலமான பேச்சு என கூறியுள்ளார்.