Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா - செல்வராகவன் படத்தில் இணைந்த தேசிய விருது கலைஞர் !

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சுமாரான வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு என்ஜிகே என்ற தலைப்பை வைத்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

இப்படத்தில் இதுவரை பார்க்காத சூர்யாவை பார்ப்பீர்கள் என்று தயாரிப்பு குழு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மிக முக்கிய தொழிநுட்ப கலைஞரான எடிட்டர் பிரவீன் கே எல் இணைந்துள்ளார்,

இது பற்றி அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், சூர்யா - செல்வராகவன் படத்தில் இணைந்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது, தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவுக்கு மிக்க நன்றி, எப்போதுமே செல்வா சாரின் எழுத்துக்கு நான் ரசிகன், அதுவும் இம்முறை யுவன் - செல்வாவும் இணைவதால் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மேஜிக் கண்டிப்பாக இருக்கும் என்று நமபலம் என தெரிவித்துள்ளார் பிரவீன் கே எல்.