Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் தள்ளிபோகிறதா காலா ? - வெளிவந்த புதிய தகவல் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற ஜூன் மாதம் 7ம் தேதி வெளியாகவுள்ளது காலா. இப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், ஏற்கனவே இப்படத்தின் பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

காலா படத்தின் ரிலீஸ் வேலைகள், விளம்பர யுக்தி விஷயங்கள் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது தூத்துக்குடியில் துப்பாக்கி சுட்டால் 12க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிர் இழந்துள்ளனர்.

தமிழகமே சோகமான சூழலில் இருக்கும் பொது காலா படம் வெளிவருவது ரஜினி அவர்கள் விரும்பவில்லை. லைக்கா நிறுவனத்திடம் இதுபற்றி ரஜினி பேசியதாக தகவல் கூறப்படுகிறது. ஆகையால் காலா ரிலீஸ் சில மாற்றங்கள் நடைபெறலாம், இதுபற்றி அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள்