Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களிடம் அன்பு வேண்டுகோள் வைத்த கார்த்தி !

பொழுதுபோக்கு படங்களில் தன்னால் முடிந்த வரை சில சமூக விஷயங்களை பேசக்கூடிய நடிகராக இருப்பவர் நடிகர் கார்த்தி. இன்று பிறந்த நாள் கொண்டாடிய அவருக்கு திரையுலக பிரபலங் பலர் வாழ்த்தினர். அதே சமயம் ரசிகர்களும் கார்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய வண்ணம் இருந்தனர்.

இதை கவனித்த கார்த்தி ரசிகர்களிடம் ஒரு அன்பு கட்டளை விடுத்தார், அத்வத்ஜ் இன்றைய எனது பிறந்த நாளை ஒரு கொண்டாட்டமாக ரசிகர்கள் கொண்டாட வேண்டாம்.

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் போராட்டதின்போது 13 பேர்களின் உயிர்கள் பலியான நிலையில் தமிழகமே துக்கத்தில் இருக்கும்போது எனக்காக பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டு கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி உலகில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் இதுவொரு துக்க சம்பவம் ஆகும் என்று தெரிவித்தார்.