Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், அஜித்திற்கு நிகராக ஒரு சாதனையை செய்த யோகிபாபு

தமிழ் சினிமாவில் சாதனைக்கு மேல் சாதனை செய்பவர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்களின் பாக்ஸ் ஆபிஸில் ஆரம்பித்து, யு-டியூப் ஹிட்ஸ் வரை போட்டி இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

ஆனால், இவர்களுக்கு இணையாக யு-டியூபில் யோகிபாபு ஒரு சாதனை செய்துள்ளார், ஆம், இவர் நயன்தாராவை காதலிப்பது போல் ஒரு பாடல் கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த சிங்கிள் ட்ராக் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது அனைவரும் அறிந்ததே, இப்பாடல் ஏதோ விஜய், அஜித் படத்தின் பாடல்கள் ரிலிஸானது போல் ஹிட்ஸை குவித்து வருகின்றது.

இப்பாடல் வெளிவந்து 10 நாட்களில் சுமார் ஒரு கோடி ஹிட்ஸை கடந்துள்ளது. அதுமட்டுமின்றி 2 லட்சத்திற்கு மேல் லைக்ஸை இப்பாடல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.