Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் இயல்பான மனிதர் எனக்கு ரொம்ப பிடிக்கும்! வெளிநாட்டு பிரபலம் சொன்னது

அஜித் திரையில் வந்தாலே போது ரசிகர்கள் பொங்கிவிடுவார்கள். அவரை அதிகமாக நேசிக்கும் ரசிகர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். அவரோ ரசிகர் மன்றம் வேண்டாம்.

அவர்கள் தங்களுடைய குடும்பத்தை நன்றாக கவனித்தால் அதுவே எனக்கு போது என இருக்கிறார். நடிப்பையும் தாண்டி அவர் பைக், கார் ரேஸ்ஸில் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் உண்டு.

பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த விசயத்தில் அவருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அண்மையில் சீனாவை சேர்ந்த வில்லியம் சியா அஜித் பற்றி பேசியுள்ளார்.

எனக்கும் அஜித்தை மிகவும் பிடிக்கும். அவர் இயல்பான மனிதர். மலேசியாவில் அவரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ரேஸில் கலந்துகொள்பவர்களுக்கு நல்ல அறிவுரைகள் சொல்வாராம் என கூறினார்.

வில்லியம் சியா அயல் நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் அழகாக தமிழ் பேசும் திறமையால் இணையதளங்களில், சமூகவலைதளத்தில் அதிகம் பிரபலமானவர்.