Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவால் போலிஸ், ரவுடி, நீதிமன்றம் என பல கஷ்டங்களை அனுபவித்த பிரபலம்

சிம்பு எப்போதும் வெளிப்படையாக பேசும் மனிதர். அவர் யாருக்கு எந்த உதவி என்றாலும் உடனே உதவக்கூடிய சுபாவம் கொண்டவர்.

ஆனால், சில வருடங்களுக்கு முன் வரை சிம்பு என்றாலே ஒரே பஞ்சாயத்து தான், அதிலும் இவரின் வல்லவன் படத்தால் அப்படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன் படாத கஷ்டங்களே இல்லையாம்.

இதை அவரே கூறியுள்ளார், தேனப்பன் வல்லவன் படம் பற்றி பேசுகையில் ‘சிம்பு 30 நாட்களில் பாடல்கள் தவிர்த்து வல்லவன் படத்தை எடுத்து தருகின்றேன் என்றார்.

அவர் சொன்னப்படி நடக்காமல், 3 வருடம் இழுத்தடித்துவிட்டார், படத்தின் போஸ்ட்டர் வெளிவந்த நாளே(சிம்பு, நயன்தாரா முத்தக்காட்சி போஸ்ட்டர்) போலிஸ், நீதிமன்றம் என பார்த்துவிட்டேன்.

அதை தொடர்ந்து வல்லவன் படத்தின் சிட்டி ரைட்ஸ் எனக்கு தருவதாக கூறினார்கள், அதை சிம்புவே என்னிடம் தெரிவித்தார்.

ஆனால், படம் ரிலிஸாகும் சமயத்தில் சிம்பு உள் ரூமில் உட்கார்த்துக்கொண்டு வெளியே வரவே இல்லை, அவருடைய ரசிகர்கள் மற்றும் ரவுடிகள் அருவாளுடன் நின்று என்னை மிரட்டினார்கள்.

பிரச்சனை முதலமைச்சர் வரை சென்றுவிட்டது, இனி சிட்டி ரைட்ஸை விட்டுக்கொடுக்க வேண்டும் என என்னையே மிரட்டினார்கள்’ என தேனப்பன் கூறியுள்ளார்.