Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படம் எடுப்பதற்கு முன்பே ரூ 5 கோடி லாபம் பார்த்த தனுஷ் படம்

தமிழ் சினிமா ஒரு காலத்தில் படம் எடுத்து அது தியேட்டருக்கு வந்து ஓடினால் தான் லாபம் என இருந்தது. ஆனால், தற்போதெல்லாம் படம் பூஜை போடும் போதே லாப கணக்கை போட தொடங்கிவிடுகின்றனர்.

அந்த வகையில் தனுஷ் அடுத்து ரூ 70 கோடி பட்ஜெட்டில் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் யார் யார் நடிக்கின்றார்கள், யார் டெக்னிஷியன்கள் என்பதே இன்னும் முடிவாகவில்லை, ஆனால், படத்திற்கு ரூ 5 கோடி வரை லாபம் வருவது போல் தனுஷ் செய்துவிட்டாராம்.

ஆம், டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ் அப்படி, இப்படி என்று ரூ 5 கோடி தற்போதே லாபம் வரும்படி தனுஷ் பக்கா ப்ளானில் படத்தை தொடங்கவுள்ளாராம்.