Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமந்தா கணவர் கையில் இருக்கும் டாட்டூவுக்கு இதுதான் அர்த்தமா?

தங்கள் மனதிற்கு நெருக்கமான ஒன்றை பற்றி டாட்டூ போட்டுக்கொள்வது பலரும் செய்யும் விஷயம் தான். ஆனால் நடிகைகள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை.. உடலின் பல்வேறு இடங்களிலும் டாட்டூ போட்டுள்ளதை நாம் பார்த்திருப்போம்.

நடிகை சமந்தாவின் கணவர் நாக சைதன்யா தன் கையில் யாருக்கும் புரியாத ஒரு டாட்டூவை போட்டுள்ளார். அதை பார்த்து ஒரு ரசிகர் ட்விட்டரில் காமெடியாக பதிவிட்டிருந்தார. "மோர்ஸ் கோடு படி இது சமந்தாவை அவர் திருமணம் செய்த நாள் 6-10-17 என்பதை குறிக்கும்" என அவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

அந்த ட்விட்டை பார்த்த சமந்தா "அது என்ன என தெரிந்துகொள்ள அதிக ஆர்வமாக உள்ளீர்கள் போல" என பதிலளித்துள்ளார்.