Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்-ஷாலினியின் காதலில் முதன்முதலாக ஒரு சுவாரஸ்ய விஷயத்தை கூறிய ஷாமிலி

பிரபலங்களில் சிறந்த ஜோடி என்றாலே முதலில் நியாபகம் வருவது அஜித்-ஷாலினி. இவர்களின் சொந்த விஷயங்கள் பற்றி எப்போதும் அவ்வளவாக செய்திகள் வராது.

இந்த நேரத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட ஷாலினியின் தங்கையும், நடிகையுமான ஷாமிலி அவர்களது காதல் கதை பற்றி சிலவற்றை பேசியுள்ளார்.

அப்போது அவர், காதலை முதலில் அவர்களுக்குள் தெரிவித்து கொண்டனர். அஜித் அவர்கள் கொடுக்கும் பூக்களை யாருக்கும் தெரியாமல் ஷாலினியிடம் கொடுப்பது போன்ற விஷயங்களை செய்திருக்கிறேன்.

அஜித் அவர்கள் எப்போதும் தன்னுடைய மனைவிக்கு சுதந்திரம் கொடுப்பார். அதுவே அவர்களது வாழ்க்கைக்கு ஒரு அழகான விஷயம் என்று பேசியுள்ளார்.