Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த விஷயத்தில் சச்சின் இல்லை தோனி தான் என் சாய்ஸ், அரவிந்த்சாமி அப்படி கூறியது ஏன்?

அரவிந்த்சாமி நல்ல நடிகர் என்பதை தாண்டி பண்முக திறமை கொண்டவர். இவர் நடிப்பில் விரைவில் சதுரங்கவேட்டை படம் திரைக்கு வரவுள்ளது.

அதுமட்டுமின்றி மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் படத்திலும் நடித்துள்ளார், இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்தார்.

இதில் இவரிடம் கிரிக்கெட் பற்றி கேட்க, அதில் தன் ஆல்டைம் பேவரட் கிரிக்கெட் 11 வீரர்களை கூறினார்.

இதில் சச்சின், கவாஸ்கர், தோனி, ப்ராட்மேன் என 11 பேர் இருக்க, ஒவ்வொருத்தரும் ஏன் என்ற விளக்கத்தையும் கூறினார்.

இந்த 11 பேரில் கண்டிப்பாக தோனியை தான் கேப்டன் ஆக்குவேன் என்று கூறினார், ஏனெனில் சச்சின், கவாஸ்கர் பலரும் திறமையான பேட்ஸ்மேனே தவிர, சிறந்த கேப்டனாக நிரூபிக்கவில்லை.

அதே நேரத்தில் இத்தனை ஜாம்பவான்களை கொண்டு செல்ல ஈகோ இல்லாத ஒரு ஆள் தேவை, அவர் தான் தோனி என்று விளக்கம் கொடுத்தார்.