Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கிண்டலடித்த பிரபல சீரியல் நடிகர்

கமல் அரசியலுக்கு வந்து பரபரப்பாக வேலை பார்க்கிறார். நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னதை தாண்டி ரஜினி இன்னும் அதிகாரப்பூர்வமாக களத்தில் இறங்கவில்லை.

இந்த நேரத்தில் அவர் தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோக்கம் குறித்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் ஒவ்வொரு கருத்து கூறி வருகின்றனர்.

தற்போது பிரபல தொலைக்காட்சி நடிகரும், தொகுப்பாளருமான விக்னேஷ் கார்த்திக் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், ரஜினி அரசியலுக்கு வருவது இயக்குனர் ஹரி ஒரு கலை சம்பந்தப்பட்ட படம் எடுப்பது போல், பொருந்தாத ஒரு விஷயம் என்று பதிவு செய்துள்ளார்.