Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போராட்டமே வேண்டாம் என்று சொன்ன ரஜினி கருத்திற்கு ரஞ்சித் முதன் முறையாக அளித்த பதில்

போராட்டம் போராட்டம் என்று தமிழகமே சுடுகாடாக்காதீர்கள் என்று நேற்று ரஜினி பேசியது தான் இணையத்தில் செம்ம வைரல். அப்படியிருக்க இவரின் காலா படம் அடுத்த வாரம் வரவுள்ளது.

இப்படத்தின் கதையே போராட்டம் பற்றி தான், இந்த நேரத்தில் ரஜினி இப்படி பேசியிருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுக்குறித்து காலா இயக்குனர் ரஞ்சித்திடம் கூறுகையில் ‘போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல, போராட்டம் நடத்தியே உரிமைகளை பெற வேண்டியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்றிலிருந்து நெட்டிசன்கள் காலா வசனத்தையும், ரஜினி பேசிய ரியல் லைப் வசனங்களையும் ஒப்பிட்டு அவரை கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.