Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேதாளம் பெங்காலி ரீமேக்கில் நடிக்கும் ஜீத் யார் தெரியுமா, எத்தனை படத்தை ரீமேக் செய்துள்ளார் பாருங்க

வேதாளம் படம் பெங்காலி மொழியில் ஜீத் என்பவர் நடிப்பில் ரீமேக் ஆகியுள்ளது. முதலில் இந்த ஜீத் யார் என்று பார்ப்போம்.

பெங்காலி சீரியலில் தலையை காட்டி மெல்ல தெலுங்கு சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர், ஆள் பார்க்க ஹீரோயின்களுக்கு பார்க்கும் அமெரிக்கா மாப்பிள்ளை போல் தான் அப்போது இருப்பார்.

ஆனால், கொஞ்சம் சுதாரித்து தன் சொந்த மொழியிலேயே கடையை போடலாம் என நம் தளபதி நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தை சதி என்ற பெயரில் ரீமேக் செய்து வெற்றிக்கொடி நாட்டினார்.

அதை தொடர்ந்து அவர் இதுவரை 30 படங்களுக்கு மேல் நடித்திருப்பார், இதில் குறைந்தது 25 படம் ரீமேக் தான்.

அதில் தமிழில் சூப்பர் ஹிட்டான கண்ணெதிரே தோன்றினாள், பத்ரி, கில்லி, சிங்கம், துப்பாக்கி, தீபாவளி தற்போது வேதாளம் வரை ரீமேக் செய்து மெகா ஹிட் அடித்து அங்கு சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார்.

அடுத்த வாரம் இவர் நடித்த வேதாளம் ரிலிஸாகின்றது, எப்படியும் அதுவும் சூப்பர் ஹிட் தான், ஏனெனில் ஜீத்திற்கு அங்கு அப்படி ஒரு மாஸ் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பிழைக்கத்தெரிந்த ஹீரோ.