Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் பிரபல நடிகரின் தம்பி கைது! இத்தனை கோடி முறைகேடாம்.

ஐ.பி.எல் கிரிக்கெட் முடிந்து இப்போது தான் ரசிகர்கள் கொஞ்சம் அமைதிக்கு திரும்பியிருக்கிறார்கள். இதில் மூன்றாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு 10வது சீசன் நடைபெற்ற சமயத்தில் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது. இதனால் தீவிர விசாரணை நடத்தப்பட்டு போலீசார் சிலரை கைது செய்தார்கள்.

இதில் கடந்த மாதம் ஜலான் என்பவரை கைது செய்யப்பட்டார். புகாரின் படி கிரிக்கெட் சூதாட்ட கும்பலில் இவர் தான் முக்கியமானவராக செயல்பட்டிருக்கிறார். விசாரணையில் அவர் ரூ.100 கோடிக்கு மேல் சூதாட்டம் நடந்திருப்பதும் வெளிநாடுகளில் உள்ள பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளாராம்.

இதில் பிரபல நடிகர் சல்மான் கானின் தம்பி நடிகர் அர்பாஸ் கானுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர் பாலிவுட் சினிமாவின் நடிகரும் இயக்குநர் ஆவார்.மேலும் இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அர்பாஸ் கானுக்கு மும்பை காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளனர்.