Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐபிஎல் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்! இத்தனை கோடி இழந்தாரா?

ஐபிஎல் என்றால் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. 2008ல் இது தொடங்கியது முதலே சூதாட்டம் நடப்பது பலமுறை தெரியவந்துள்ளது. அதற்காக சிஎஸ்கே உள்ளிட்ட இரண்டு அணிகளுக்கு 2 வருடங்களாக தடையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர்.

அவர் கடந்த ஆறு வருடங்களாக தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதில் 2.0 கோடி ரூபாய் இழந்துள்ளார்.

இது சூதாட்ட புக்கீ சோனு ஜலான் என்பவர் கைதானதால் தெரிய வந்துள்ளது. விசாரணை நடத்த போலீசார் அர்பாஸ் கானுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

நேற்று ஆஜரான அவரிடம் போலீஸ் தீவிர விசாரணை நடத்தினர். தான் சூதாட்டத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என போலீஸ் தெரிவித்துள்ளது.

மேலும் தான் பெட் கட்டிய பணத்தை தராததால் சூதாட்ட குழு தன்னை மிரட்டி வந்ததாக அர்பாஸ் கான் போலீசிடம் கூறியுள்ளார்.

இது பற்றிய விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.