Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் விருது விழாவிற்கு வராததற்கு இதுதான் காரணமா?

நடிகர் விஜய்யின் மெர்சல் படம் சென்ற வருடம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. நேற்று நடந்த விஜய் விருது விழாவில் இந்த படத்திற்கு பல முக்கிய விருதுகளும் கிடைத்தன.

இந்நிலையில் Favorite நடிகர் விருது மட்டும் யாருக்கும் வழங்கப்படவில்லை. விஜய் இந்த விழாவிற்கு வராததால் அந்த விருதை கொடுக்காமலே விட்டுவிடுவார்களா என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த விழா சொன்ன தேதியில் நடக்காமல் திடிரென தள்ளிப்போய் மீண்டும் ஒரு புதிய தேதி அறிவிக்கப்பட்டது. அதனால் தான் விஜய் இதற்கு நேரம் ஒதுக்கமுடியாமல் போயிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் விஜய் தற்போது ஒரு பிரபல தொலைக்காட்சி தயாரிக்கும் படத்தில் தான் நடித்து வருகிறார். அவர்கள் கொடுத்த அழுத்தம் தான் விஜய் விருது விழாவில் கலந்துகொள்ளாமல் அவர் புறக்கணிக்க காரணம் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.