Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரிசுப்பணத்தை பிரித்து தராமல் ஏமாற்றிய பிக்பாஸ் போட்டியாளர் - வறுத்தெடுத்த ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. இந்த நிகழ்ச்சி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, கன்னடம் என பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

ஹிந்தி பிக்பாஸ் 11வது சீசனில் இறுதி டாஸ்கில் வெற்றி பெற்ற நடிகர் விகாஸ் குப்தாவுக்கு 6 லட்சம் பரிசு தொகை கொடுக்கப்பட்டது. அதை அவர் மற்ற போட்டியாளர்களாக அர்ஷி கான் மற்றும் ஜோதி குமார் ஆகியோருடன் பகிர்ந்துகொள்வேன் என நிகழ்ச்சியிலேயே கூறினார்.

ஆனால் நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் விகாஸ் குப்தா அந்த பரிசு தொகையை யாருக்கும் பகிர்ந்து கொடுக்கவில்லையாம்.

விளம்பரத்திற்காக டிவியில் பொய் சொன்ன அவரை தற்போது ட்விட்டர் வாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.