Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் அடுத்த ரஜினி ஆக வரலை.. கண்ணீர் விட்ட சிம்பு: STR எமோஷனல் வீடியோ

நடிகர் சிம்பு சமீப காலமாக எந்த வித சர்ச்சைகளில் சிக்காமல் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அதனால் அவருக்கு தற்போது பல முன்னணி இயக்குனர்கள் ஆவரை தேடி சென்றுள்ளனர். அவருடன் சண்டையில் இருந்த இயக்குனர் கவுதம் மேனன் சமரசமாகி தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தில் மீண்டும் இணையவுள்ளனர்.

இந்நிலையில் சிம்பு தற்போது ஒரு எமோஷனலாக பேசி ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மணிரத்னம் படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசியுள்ளார். லேட்டாக வருகிறார் என பலர் தன் மீது கூறும் குற்றச்சாட்டு பற்றியும் அவர் பேசியுள்ளார்.

மேலும் பலருக்கும் அடுத்த ரஜினி ஆக ஆசை என தனுஷ் நேற்று ஒரு விழாவில் பேசினார். அது பற்றியும் சிம்பு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

"நான் தான் ரஜினி என நினைப்பவர்கள் தான் அப்படி பேசுவார்கள். நான் தான் அடுத்த ரஜினி என நினைத்து நான் வரவில்லை, ரஜினி மாதிரி வரனும்னு தான் நினைச்சு வந்தேன்” என அவர் கூறியுள்ளார்.