Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் வசூலை முறியடித்த தனுஷ்- மாஸ் தகவல்

தனுஷ் கோலிவுட், பாலிவுட் என கலக்கி வருகின்றார். இந்த நிலையில் தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்திலும் கால் பதித்துவிட்டார்.

ஆம், தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான The Extraordinary Journey of the Fakir படம் கடந்த வாரம் ப்ரான்ஸ் நாட்டில் வெளிவந்தது.

இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது, மேலும், இதுவரை தமிழ் நடிகர்களில் ப்ரான்ஸ் நாட்டில் அதிக வசூல் செய்தது ரஜினியின் எந்திரன் மற்றும் விஜய்யின் மெர்சல் தான்.

இந்த இரண்டு படங்களின் வசூலையும் 4 நாட்களில் தனுஷின் The Extraordinary Journey of the Fakir படம் முறியடித்துள்ளது. இது ஹாலிவுட் படம் என்றாலும், ஒரு தமிழ் நடிகராக தனுஷ் தற்போது ப்ரான்ஸ் வசூலில் முன்னிலையில் உள்ளார்.