Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சர்ச்சை! நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பிய நானி

நேற்று தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியுள்ளது. அதை தெலுங்கு நடிகர் நானி தொகுத்து வழங்குகிறார். இதில் நிர்வாண போராட்டம் நடத்திய சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி கலந்துகொள்கிறார் என முன்பே கூறப்பட்டது.

"ஸ்ரீரெட்டி வந்தால் நான் வெளியேறிவிடுவேன் என நானி கூறியதால் தான் அவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக சேர்க்கப்படவில்லை" என புதிய குற்றச்சாட்டை வைத்தார் நடிகை.

மேலும் நடிகர் நானி என் வீட்டுக்கு அடிக்கடி வருவார், அப்போது எனக்கு இரண்டாவது ஹீரோயின் சான்ஸ் வாங்கி தருவதாக பலமுறை கூறியுள்ளார். ஆனால் இப்போது எனக்கு வரும் வாய்ப்புகளை கூட தட்டிபறிக்கிறார் எனவும் குற்றமச்சாட்டியிருந்தார்.

"என் புகழை கெடுக்கும் விதத்தில் இப்படி பொய்யான தகவல்களை பரப்புவதை நிறுத்தவேண்டும். 7 நாட்களுக்கும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்" என நானி தற்போது ஸ்ரீரெட்டிக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளார்.