Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமலை ட்ரோல் செய்து போட்டோ வெளியிட்ட முன்னணி காமெடியன்

தமிழ் சினிமாவில் ஹிட்டான படங்களின் காட்சிகளை ட்ரோல் செய்யும் விதத்தில் வந்த தமிழ்ப்படம் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. மேலும் படக்குழு அடிக்கடி சிலரை ட்ரோல் செய்யும் விதத்தில் புகைப்படம் வெளியிட்டும் வருகின்றனர்.

சமீபத்தில் அவர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கலாய்த்து ஒரு புகைப்படம் வெளியிட்டனர். அது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் தற்போது அவர்கள் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அணிந்து வந்த உடையை கலாய்க்கும் விதத்தில் ஒரு போட்டோ வெளியிட்டுள்ளனர்.

அதில் காமெடியன் சதிஷ் கமல் போல உடை அணிந்து படத்திற்கு டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார்.