Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெங்கட் பிரபுவை அடுத்து வளரும் இயக்குனருடன் இணைகிறார் சிம்பு- லேட்டஸ்ட் அப்டேட்

சிம்பு தனது சினிமா வாழ்க்கையில் வேகமாக வளர்ந்து வந்த நிலையில் தற்போது அதற்கு இடைவெளி விட்டது போல் அவரின் படங்கள் வருவது குறைந்து வருகின்றது. சிம்பு கடைசியாக நடித்த AAA படம் வந்து ஒரு வருடங்கள் ஆகிவிட்டன. மேலும் அந்த படமும் எதிர் பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை.

அதன்பின் அவர் எந்த படத்தில் நடிக்க போகிறார் என்பது போன்ற எந்த தகவல்களும் வெளிவரவில்லை. இதனால் கவலையில் இருந்த அவரது ரசிகர்களுக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் சில தினங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு உடனான அவரது அடுத்த படத்தின் தகவல் வெளிவந்தது. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

ஏனெனில் அந்த தகவல் வெளிவந்த சில தினங்களிலேயே அடுத்த படத்திற்கான தகவல் வெளி வந்துள்ளது. அந்த தவகல் என்னவென்றால், சிம்பு அடுத்ததாக துருவங்கள் பதினாறு, நரகாசூரன் போன்ற படங்களை இயக்கிய வளர்ந்து வரும் இயக்குனரான கார்த்திக் நரேன் படத்தில் நடிக்க இருக்கிறாராம். அப்படத்தை வீரம், ஜில்லா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த விஜயா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இது ஆண்டு கணக்கில் சிம்புவின் ஹிட் படதிற்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இனிய தகவலாக அமைந்துள்ளது